சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு நேற்று முன் தினம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து முதலிரவில் தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு காதலர் இருந்ததாகவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிந்து கொண்ட கணவர் தனது மனைவியை ஒரே நாளில் விவாகரத்து செய்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஓட்டலில் திருமணம் ஆன ஜோடிக்கு முதலிரவு நடக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்களுடைய முதலிரவு அறைக்கு வந்த ஒருவர் தான் மணப்பெண்ணின் காதலர் என்றும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டு உங்களுடன் திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறி தாங்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைபப்ட ஆதாரங்களை காட்டினார். இதுகுறித்து கணவர் தனது மனைவியிடம் விளக்கம் கேட்டபோது அந்த நபரை காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அவரை வெறுப்பதாகவும், உங்களுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புவதாகவும் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த கணவர் உடனே முதலிரவை ரத்து செய்துவிட்டு, மறுநாள் காலையில் விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாக கூறினார். இந்த விவாகரத்தில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லையென்றும், காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழவே தான் விவாகரத்து செய்வதாக மணமகன் கூறினார். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த மதபோதகர்Shaikh Ghazi Bin Abdul Aziz al Shammar அவர்கள் மணமகனுக்கு அறிவுரை கூறி விவாகரத்து முடிவை கைவிடும்படி கூறியும் மணமகன் மறுத்துவிட்டார். தன்னை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்ததால் காதலரும் அந்த பெண்ணை தற்போது கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
















