அவுஸ்திரேலியாவில் இருந்து மனைவி பிள்ளைகளை பார்க்க என 3 மாத விடுமுறையில் மலேசிய வந்த ஒருவர், புலிகள் இயக்க உறுப்பினர் எனக் கூறி, மலேசிய அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இவர் மலேசிய வந்த விடையத்தை எவ்வாறு இலங்கை புலனாய்வு மோப்பம் பிடித்தது ? தமிழர்களே தமிழர்களுக்கு எதிரியாக மாறி பல காட்டிக்கொடுப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள் ! இது பெரும் வேதனை தரும் விடையமாக இருக்கிறது ! மலேசியாவில் இவர் மட்டும் அல்ல மேலும் 3 இலங்கையர்கள் கடந்த 3ம் திகதி மலேசிய அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் யார் ? வாருங்கள் விடையத்திற்கு செல்லலாம்.
மலேசியாவில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 17 ஈழத் தமிழர்கள் கைதாகியுள்ளார்கள். அவர்களின் பலர் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் முன் நாள் புலிகள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கடந்த 6 தினங்களுக்கு முன்னர் கூட மேலும் 4 பேரை மலேசிய அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளர்கள். இதில் ஒரு சிங்களவர் கூட இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. இந்திக சஞ்சீவ என்னும் சிங்களவர், சீலன், ஈசன், அப்துல் சலீம் ஆகிய நாலு பேருமே கைதாகியுள்ளார்கள். இதில் இந்திக சஞ்சீவ என்னும் சிங்களவர், முன் நாள் இராணுவச் சிப்பாய் ஆவார். அவர் புலிகளுக்கு பல இராணுவ ரகசியங்களை கொடுத்து உதவியவர் என்று கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு புலிகள் யுத்தரீதியாக வெல்லப்பட்ட பின் அவர் மலேசியா சென்று அங்கே வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அவர் தற்போது கூட தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இராணுவத்தினுள் நடக்கும் பல விடையங்களை வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்களுக்கு தெரிவித்து வந்துள்ளார் என்று இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க, சசி என்று அழைக்கப்படும் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்த நபரும் கைதாகியுள்ளா.
இவர் வெடி பொருட்களை கையாழ்வதில் வல்லுனர் என்றும் 1999ம் ஆண்டு சந்திரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் சூத்திர தாரி இவரே என்றும் இலங்கை அரசு மலேசிய பொலிசாருக்கு அறிவித்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இவை அனைத்தும் மலேசிய பொலிசாரிடன் கையளிக்கப்பட்ட அறிக்கை ஆகும். இதன் அடிப்படையில் தான் இச் செய்தி எழுதப்படுகிறது. மொகமெட் அப்துல் சலீம் என்னும் நபரை கைதுசெய்ய, இந்திய றோ அமைப்பே காரணம். இந்தியாவில் சமீபத்தில் கைதான இலங்கை முஸ்லீம் நபர் ஒருவர் தொடர்பான செய்தியை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். பாக்கிஸ்தான் உளவு பிரிவால் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம் நபர் ஒருவரை, தமிழக கியூ பிரிவு பொலிசார் சமீபத்தில் கைதுசெய்தார்கள்.
அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடுத்தே மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையரான மொகமெட் அப்துல் சலீம் கைதாகியுள்ளார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, 2009ம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியா சென்று தஞ்சமடைந்த ஈசன் என்னும் நபர், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர் ஆவார். அவரது மனைவி பிள்ளைகள் மலேசிய வந்தவேளை அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்கு 3 மாத விடுமுறையில் சென்றுள்ளார்.
இலங்கை அரசு கொடுத்த ரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைதுகள் நடைபெற்றுள்ளது. ஈசனுக்கும் சமீபத்தில் மலேசியாவில் கைதான குஷாந்தனுக்கும்(வான் புலிகள்) தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது. ஈசன் என்னும் இன் நபர் மலேசியா சென்றுள்ள விடையத்தை இலங்கை புலனாய்வு எவ்வாறு மோப்பம் பிடித்தது ? தமிழர்களே தமிழர்களை காட்டிக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருவரைப் பிடிக்க வில்லை என்றால், அவர் இலங்கைக்கு விடுமுறை செல்லும்போது கட்ட நாயக்கா ஏர்-போட்டிற்கு தகவல் சொல்வதும், அவர் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்று காட்டிக்கொடுப்பதும் தற்போது தாராளமாக நடைபெற்று வருகிறது.
இப்படியும் ஒரு சமூகம் இருக்குமா ? என்று வேற்று இனத்தவர்கள் பார்த்து கைகொட்டி கேலி செய்து சிரிக்கும் அளவு இந்த விடையம் கொடி கட்டி பறக்கிறது ! வரலாற்றை எடுத்துக்கொண்டால், பேரரசர்கள் தோற்றுபோக காட்டிக்கொடுப்புகளே முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் அந்த இன வரலாற்றில் யாரவது ஒருவர் காட்டிக் கொடுத்திருப்பார். ஆனால் ஈழத் தமிழர்கள் என்னும் இனத்தை எடுத்தால் பலர் காட்டிக்கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
காக்கை வன்னியனில் இருந்து கருணா வரை தொடர்ந்து தற்போது எமது இன அழிவிற்கும் போராட்ட அழிவிற்க்கும் இதுவே முக்கிய காரணமாக உள்ளது. பாலஸ்தீன இனத்தவர்களை , அல்லது யூதர்களை நாம் பார்க்கவில்லையா ? அவர்களின் ஒற்றுமை பற்றி நாம் கேட்டறிந்ததே இல்லையா ? உலக அறிவு இல்லாமல் , வரலாற்றையும் அறியாமல் எவ்வாறு ஈழத் தமிழர்கள் பலர் இவ்வாறு ஆள்-காட்டியாக மாறுகிறார்கள் என்று தெரியவில்லை. எமது இனத்தை நினைத்தே நாம் வெட்கி, நாணி, குறுகவேண்டி உள்ளதே ?
















