அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்?

அடுத்த அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லுக்கு இன்­ன­மும் 18 மாதங்­கள் கால அவ­கா­ச­முள்­ளது. ஆனால் அது குறித்த வாதப் பிர­தி­வா­தங்­கள், எதிர்வு கூறல்­கள் என அர­சி­யல் நிலமை இப்­பொ­ழுதே பர­ப­ரப்­பாகி வரு­கின்­றது.

இன்­றைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வாரா என்­பது குறித்து நிச்­ச­யப்­ப­டுத்­திக் கொள்ள இய­ல­வில்லை. கடந்த 2015அரச தலை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது தாம் அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழித்­துக் கட்­டி­விட்டு அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டாது ஒதுங்­கிக் கொள்­ளப் போவ­தாக அவர் தெரி­வித்து வந்­தி­ருந்­தார்.

ஆயி­னும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் துமிந்த திச­நா­யக்க போன்றே ஐ.ம.சு.கூட்­ட­ணி­யின் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் மகிந்த அம­ர­வீ­ர­வும் கூட, எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே என பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்து வந்­துள்­ள­னர்.

அதே­வேளை ஐ.தே.கட்­சி­யைப் பொறுத்­த­வரை, அடுத்த அரச தலை­வர் பத­வி।க்­கான தேர்­தல் அந்­தக் கட்­சிக்கு மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தொன்று. முன்­னைய 2010ஆம் மற்­றும் 2015ஆம் ஆண்­டு­க­ளின் அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்சி தனது சார்­பாக வேட்­பா­ளர் எவ­ரை­யும் நிறுத்­தி­ய­தில்லை.

2010ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி ஆத­ர­வ­ளித்த பொது வேட்­பா­ளர் சரத் பொன்­சேகா தோல்வி கண்­ட­து­டன், 2015ஆம் ஆண்­டுத் தேர்­த­லின் பொது வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.தே.கட்சி­யின் ஆத­ர­வு­டன் வெற்றி பெற்­றி­ருந்­தமை சக­ல­ரும் அறிந்­த­தொன்றே.

எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்­சி­யின் நிலைப்­பாடு எவ்­வாறு அமை­யும்?

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­தல் குறித்து ஐ.தே.கட்சி இது­வரை எந்­த­வொரு முடி­வை­யும் மேற்­கொள்­ள­வில்லை. தற்­போது தலைமை அமைச்­ச­ரா­க­வுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வைத்­தான் ஐ.தே.கட்சி தனது அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­த­வுள்­ளது. இது குறித்து எதிர்­கா­லத்­தில் மாற்­ற­மெ­து­வும் ஏற்­ப­டுமா என்­பது தெரி­ய­வில்லை என ஐ.தே.கட்­சி­யின் சி।ரேஷ்ட தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ஜோன் அம­ர­துங்க அண்­மை­யில் கருத்து வௌியிட்­டி­ருந்­தார்.

அதே­வேளை இது­வரை கால­மும் இடம்­பெற்ற அரச தலை­வர் பத­விக்­கான தேர்­தல்­கள் ஒவ்­வொன்­றி­லும் ஜே.வி.பி.தரப்பு வெவ்­வேறு, மாறு­பட்ட விதத்­தி­லான நிலைப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டித்து வந்­தி­ருந்­தது. அந்த வகை­யில் 1982ஆம் ஆண்­டின் அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஜே.வி.பியின் தலை­வர் ரோகண விஜே­வீர போட்­டி­யிட்­டி­ருந்­தும், அவர் அந்­தத் தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு­வி­யி­ருந்­தார்.

1989ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் தேர்­தலை ஜே.வி.பி முற்­று­மு­ழு­தாக புறக்­க­ணித்­தி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி, ஆயு­தப் போராட்­டம் மூலம் அதற்கு எதிர்ப்­பை­யும் வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஜே.வி।.பி ஜன­நா­யக நீரோட்­டத்­தில் இணைந்து கொண்­ட­தன் பின்­னர் இடம்­பெற்ற முத­லா­வது அரச தலை­வர் தேர்­த­லான 1994ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் ஜே.வி.பி சார்­பில் நிஹால் கலப்­பத்தி போட்­டி­யிட்­ட­போ­தும், குறித்த தேர்­த­லில் போட்­டி­யிட்ட சந்­தி­ரிகா, தாம் வெற்­றி­யீட்­டி­னால் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றை­யையே ஒழித்து விடு­வ­தாக எழுத்து மூல உறுதி வழங்­கி­ய­தை­ய­டுத்து நிஹால் கலப்­பத்தி போட்­டி­யி­னின்­றும் வில­கிக் கொண்­டார்.

அதே­வேளை 1999ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் இட­து­சா­ரித் தரப்­பி­ன­ரது பொது வேட்­பா­ள­ராக நந்­தன குண­தி­லக போட்­டி­யிட்ட போதி­லும், குறித்த தேர்­த­லில் அவர் தோல்­வி­யுற நேர்ந்­தது.

2005ஆம் ஆண்­டுக்­கான அரச தலை­வர் தேர்­த­லில் தமது கட்சி சார்­பான வேட்­பா­ளர் எவ­ரை­யும் நிறுத்­தாது சுதந்­தி­ரக் கட்சி சார்­பான வேட்­பா­ளர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஜே.வி.பி ஆத­ரவு வழங்­கிச் செயற்­பட்­டது. 2010ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வு­டன் முரண்­பட்ட நிலை­யில் இருந்து வந்த ஜே.வி.பி, எதி­ர­ணி­யின் பொது வேட்­பா­ள­ரான சரத் பொன்­சே­கவுக்கு ஆத­ர­வ­ளித்த போதி­லும், குறித்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் சரத் பொன்­சேகா தோல்­வி­யைத் தழுவ நேர்ந்­தது.

மகிந்த ராஜ­பக்ச இரண்­டா­வது தட­வை­யும் நாட்­டின் அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். 2015ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் ஜே.வி.பி வௌிப்­ப­டை­யாக எவ­ருக்­கும் ஆத­ரவு வழங்­காத போதி­லும், மகிந்த ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டு­டன் செயற்­பட்­டது. அந்த வகை­யில் அந்­தத் தேர்­த­லில் பொது எதி­ரணி சார்­பா­கப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்று நாட்­டின் அரச தலை­வர் பத­வி­யைக் கைப்­பற்­றிக் கொண்­டார்.

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஜே.வி.பியி­னர் எத்­த­கைய நிலைப்­பாட்­டைக் கைக்­கொள்­வர் என்­பது குறித்து தௌிவா­கத் ஊகிக்க இய­லாத போதி­லும் நிறை­வேற்று அதி­கார அர­ச­த­லை­வர் பத­வியை ஒழித்­தாக வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் அவர்­கள் தற்­போ­தும் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர்.

மகிந்­த­வின் தாமரை மொட்­டுத்
தரப்­பி­லும் பல்­வேறு சிக்­கல்கள்

அதே­வேளை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­லும் பிரச்சினை­கள் தலை­தூக்­கி­யுள்­ளமை உண்­மையே. கடந்த பெப்­ர­வரி மாதம்10ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் போட்­டிக் களத்­தில் மகிந்­த­வின் புதிய கட்­சி­யான தாமரை மொட்டு கட்சி குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குச் சாத­க­மான வெற்­றியை ஈட்­டி­யுள்­ளது. உண்­மை­யில் மகிந்­த­வின் ஆத­ர­வுத் தளம் பெரு­ம­ள­வில் அதி­க­ரித்­துள்ள போதி­லும், அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யால் மகிந்­த­வால் மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாது போயுள்­ளது.

எனவே மகிந்த தரப்­பின் அடுத்த அரச தலை­வர் பத­விக்­கான வேட்­பா­ளர் எவ­ரென மகிந்த தரப்­பி­னர் இது­வரை எவ­ரது பெய­ரை­யும் உறு­திப்­ப­டுத்தி அறி­வித்­தி­ராத போதி­லும், பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே அவ்­வி­தம் பொது எதி­ரணி சார்­பான வேட்­பா­ள­ராக களம் இறக்­கப்­ப­டு­வார் எனப் பேசப்­பட்டு வரு­கி­றது.

அரசு மீது குற்­றம் சுமத்­தும்
விமல் வீர­வன்ச

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் கோத்­த­பாய மகிந்த தரப்பு வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­ட­வுள்­ளமை குறித்த அச்­சத்­தா­லேயே மைத்­தி­ரி­பால அரசு அவர் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்தி சிறை­யில் அடைக்க முயல்­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச தெரி­வித்து வரு­கி­றார்.

அதே­வேளை மகிந்த தரப்­பைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் பலர், மகிந்த ராஜ­பக்ச அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாத நிலை­யில், தற்­போ­துள்ள தமது தரப்­பி­னர்­கள் குறித்த தேர்­த­லில் போட்­டி­யி­டத் தகு­தி­யா­ன­வர் கோத்­த­பா­யவே என உறு­தி­யா­கத் தாம் நம்­பு­வ­தா­கத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

தேர்­த­லுக்கு இன்­ன­மும் போதிய கால இடைவௌி உள்­ள­தால், அது குறித்து இப்­போதே உறு­திப்­ப­டுத்­தி­னால் அரசு எவ்­வி­தத்­தி­லா­வது கோத்­த­பா­ய­வுக்கு இடை­யூறு விளை­விக்­கவே முய­லும் என்­ப­தால், உரிய வேளை­யி­லேயே அந்த முடிவு உறு­திப்­ப­டுத்­தப்­படு மென­வும் அவர்­கள் கருத்து வௌியிட்டு வரு­கின்­ற­னர்.

அதே­வேளை நாம் அறிந்த வரை­யில், ஐ.தே.கட்சி சார்­பாக ரணி­லும், சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக மைத்­தி­ரி­பா­ல­வும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டக் கூடும் என்­ப­தால், எமது தெரிவு கோத்­த­பா­யவே எனக் கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் கூறிய போதி­லும், சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளது வாக்­கு­களே அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­யைத் தீர்­மா­னிப்­பவை என்ற யதார்­தத்­தைப் புற­மொ­துக்க இய­லா­துள்­ளது.

கடந்த 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் நாட்­டின் தமிழ் முஸ்­லிம் மக்­கள் மகிந்­த­வைப் புறக்­க­ணித்­த­தா­லேயே, மகிந்த ராஜ­பக்ச தோல்­வி­யுற நேர்ந்­தது என்ற அடிப்­ப­டை­யில் எதிர்­வ­ரும் தேர்­த­லில் கோத்­த­பா­ய­வால் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளது ஆத­ரவை ஈட்ட இய­லுமா என்ற கேள்வி தலை­தூக்­கு­கி­றது.

2015ஆம் ஆண்­டில் உரு­வான கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தாம்­பெ­ரும் ஏமாற்­றத்­துக்கு உட்­ப­ட­நேர்ந்­த­தாக சிறு­பான்மை இனத்­த­வர்­கள் தற்­போது உணர்ந்து கொண்­டுள்­ள­னர். ஆத­லால் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளும் தற்­போது மகிந்­த­வின் பின்­னால் அணி­தி­ரள ஆரம்­பித்­துள்­ள­னர். அது மட்­டு­மன்றி, தமிழ்க்­கட்­சி­க­ளும் தற்­போது ஒன்­றுக்­கொன்று முரண்­பட்­டுள்­ளமை தமிழ் மக்­களை அவர்­கள் மீது அதி­ருப்­தி­ய­டைய வைத்­துள்­ளது. எனவே இன்று நாட்­டின் சகல இன மக்­க­ளும் அரச தலை­வர் தேர்­தலை எதிர்­பார்த்­துள்ள நிலையே நில­வு­கி­றது என கூட்டு எதி­ர­ணி­யின் சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­கள் அடித்­துக் கூறு­கின்­ற­னர்.

அதே­வேளை இலங்கை அர­சி­ய­லில் இட­து­சாரி கொள்கை கோட்­பா­டு­க­ளைத் தொடர்ந்து பேணி­வ­ரு­ப­வ­ரும், உழைக்­கும் தொழி­லா­ளர் வர்க்­கத்­தின் நன்­ம­திப்பை ஈட்­டி­யுள்ள இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார இது பற்­றிக் கருத்து வௌியி­டு­கை­யில், ‘‘எமது தெரிவு ராஜ­பக்ச குடும்­பத்து உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ரான சமல் ராஜ­பக்­சவே. மென்­போக்கு அர­சி­யல்­வா­தி­யான சமல் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒரு­போ­தும் தவ­றான விதத்­தில் பயன்­ப­டுத்த விரும்­பாத போக்­கு­டை­ய­வர். என­வே­தான் சமல் ராஜ­பக்­சவே அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் இட­து­சா­ரித் தரப்­பி­ன­ரது தெரி­வா­கி­றார்.’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.

அதே சம­யம் அண்­மை­யில் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து, தமது அமைச்­சுப் பத­வி­க­ளை­யும் கைவிட்டு எதிர்க்­கட்சி வரி­சை­யில் இணைந்து கொண்ட 16நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வ­ரான எஸ்.பி.திச­நா­யக இந்த விட­யம் குறித்து கருத்து வௌியி­டு­கை­யில், ‘‘நாம் அர­சி­லி­ருந்து வௌியே­றி­விட்­டா­லும் ஐ.ம.சு.முன்­ன­ணி­யின் அங்­க­மான சுதந்­தி­ரக் கட்­சி­யி­லேயே தொடர்ந்­தும் அங்­கம் வகிக்­கி­றோம். எனவே, அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான எமது தெரிவு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஆவார்’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை விமல் வீர­வன்­ச­வின் தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் மொன­ரா­கலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத்ம உத­ய­சாந்த குண­சே­கர, தம­தும், தமது கட்­சி।­யி­ன­தும் அடுத்த அரச தலை­வர் வேட்­பா­ள­ருக்­கான தெரிவு கோத்­த­பாய ராஜ­பக்­ச­வே­யா­வார் எனத் தெரி­வித்­தி­ருந்­தார். ‘‘நாட்டை நேர் சீராக்கி, முப்­பது ஆண்­டு­கள் கால­மாக நாட்­டில் நிலவி வந்த பயங்­க­ர­வா­தத்­தைத் தோற்­க­டிக்க திற­மை­மிக்க பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்றி, நாட்­டைப் பாது­காத்­த­வர் கோத்­த­பா­யவே’’ என்­றார் அவர். அதே சம­யம் இலங்கை இரா­ணு­வத்­தில் சேவை­யாற்றி ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி மேஜர் ஜென­ரல் கமால் குண­ரத்­ன­வும், ‘‘அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான மகிந்த தரப்பு வேட்­பா­ள­ரா­கும் தகுதி கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கே உள்­ளது’’ என்­றார்.

இவை­யா­வும் ஒரு­பு­ற­மி­ருக்க, கடந்த பெப்­ர­வரி மாதம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் இடம்­பெற்ற நாளுக்கு அடுத்த நாளன்று அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு திரும்­பி­யி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் தாங்­கள் தலைமை அமைச்­சர் பத­வியை ஏற்­கப் போகின்­றீர்­களா? என ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்­ட­போது, ‘அதெப்­படி முடி­யும்? நான் அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­றுள்ள ஒரு­வ­ரல்­லவா?’ என பதில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார் கோத்­த­பாய. அந்த வகை­யில், அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­காக அறி­விப்பு வௌிவ­ரும் வரை­யில் இந்த நாட்டு மக்­கள் எதிர்வு கூறல்­க­ளைக் கணக்­கில் எடுக்­காது, பொறுமை காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!