யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு, மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார். இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக்கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த கணவர் மனைவி அணிந்திருந்த ஆடையைப் பார்த்து, ஆவேசமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அப்படி என்ன ஆடையை தான் அவர் அணிந்திருந்தாரோ தெரியவில்லை. போதை தெளிந்த பின் அவரிடம் தான் நாம் கேட்க்கவேண்டும் போங்கள்.
















