கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 50 பிணங்கள். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டகாசம்

iraq-blind-deadbodiesஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் அருகில் கண்கள் பிடுங்கப்பட்டும், கைகள் கட்டப்பட்டும் இருந்த நிலையில் 50 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் ஆளும் அரசுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் கடுமையான உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள திக்ரித், மொசூல் ஆகிய முக்கிய பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதுதவிர ஈராக்கின் முக்கிய ஆயுதக்கிடங்குகளையும் தீவிரவாதிகள் கைப்பற்றி இருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவத்தினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இழந்த பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகே கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் சுமார் ஐம்பது பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஈராக் நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் சாத்மான் இப்ராஹிம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இவர்கள் அனைவரும் ஷியா பிரிவு முஸ்லீம்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply