விஜயகாந்த்தை தரித்திரம் என்று திட்டி போஸ்டர் அடித்து ஒட்டிய தேமுதிக மாவட்ட செயலாலர்.

vijayakanth-posterதேமுதிக தலைவர் விஜயகாந்த், பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தற்போது உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தின் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூலை 22ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்று தேமுதிக தொண்டர்களை சந்திக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இந்த மாவட்டத்தின் செயலாளர் துரை.காமராஜ், தேமுதிக தலைவரை வரவேற்கும் விதமாக வாழ்த்து போஸ்டர் ஒன்று பிரிண்ட் செய்து நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதில் “தமிழ்நாட்டின் சரித்திரமே” என்று இருக்கும் இடத்தில் எழுத்துப்பிழை ஏற்பட்டு “தமிழ்நாட்டின் தரித்திரமே” என்று பிரிண்ட் ஆகியுள்ளது. ஆனால் இதை யாரும் கவனிக்காமல் அப்படியே பல இடங்களில் ஒட்டிவிட்டனர். பின்னர்தான் சுதாரித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

அதற்குள் ஒருசிலர் இந்த போஸ்டரை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதால் தேமுதிக கட்சியினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் மீது விஜயகாந்த் கடும் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply