பிரபுதேவாவுடனான உறவு குறித்து வெளிப்படையாக கூறிய சோனாக்ஷி சின்கா.

prabhu-deva-sonakshi-sinha1-600பாலிவுட் பட உலகில் சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோசன் என சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்த நாயகி சோனாக்ஷி சின்கா, தமிழில் சூப்பர் ஸ்டாரின் நாயகியாகியிருக்கிறார். மணிரத்னம், லிங்குசாமி என பல இயக்குநர்கள் முயன்றும் தமிழுக்கு நடிக்க வராத சோனாக்ஷி, ரஜினி படம் என்ற உடன் ஒத்துக்கொண்டுள்ளார். பிரபுதேவா உடன் நீண்டகாலமாக நட்பு பாராட்டி வரும் சோனாக்ஷி, அவர் தமிழில் படம் இயக்கினால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார். ரஜினி சார் என் அப்பாவின் நண்பர், அவருடன் நடித்தால் ஒரே நாளில் தமிழ் மக்களுக்கு தெரிந்தவளாகிவிடுவேன் எனவேதான் லிங்கா படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்கிறார்.

இந்த வயதிலும் ரஜினி இளமையாக, சுறுசுறுப்பாக இருக்கிறார். நகைச்சுவை உணர்வும், ஹீரோயிசமும்தான் அவரது ஸ்பெசல் என்று கூறியுள்ளார் சோனாக்ஷி. லிங்கா படத்திற்குப் பின்னர் விஜய், அஜீத், சூர்யா உடன் நடிக்கும் எண்ணம் சோனாக்ஷிக்கு இருக்கிறது. பிரபு தேவா என்னுடைய வெற்றிப் படங்களின் இயக்குநர். நான் அவருடைய நடனத்திற்கு ரசிகை. அவருடன் வெறும் நட்பு மட்டும்தான் உள்ளது. தமிழில் அவர் படம் இயக்கினால் கண்டிப்பாக நடிப்பேன். குஷ்பு, ஜோதிகா, தேவயானி போன்ற மும்பையைச் சேர்ந்த நாயகிகளுக்கு தமிழக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.

எனக்கு இதே வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நடிகையைப் பிடித்துப் போனால் கோவில் கட்டும் ரசிகர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்கிறார் சோனாக்ஷி.

Tags: , ,

Leave a Reply