இறுதி போட்டியில் அர்ஜென்டினா!

Lionel-Messiஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரை இறுதி போட்டியில் அர்ஜெண்டினா, நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

உலககோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின .

90 நிமிட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அப்பொழுதும் எந்த அணியும் கோல் போடாததால் பெனால்டி சூட் முறையில் வெற்றியை தீர்மானிக்கு முறைக்கு ஆட்டம் சென்றது

இதனை சரியாக பயன்படுத்திய அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெனால்டி சூட்டில் அர்ஜென்டினா அணி கோல் கீப்பர் ரொமிரொ சிறப்பாக செயல்பட்டு கோல்களை தடுத்து அர்ஜென்டினா வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியை அடுத்து இறுதி போட்டியில் ஜெர்மனியுடன் அர்ஜெண்டினா மோதயுள்ளது.

Tags: , ,

Leave a Reply