11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்டு லைக் தேடிய கொடூர அம்மா

Mother-killes-sonநியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் குயின்ஸ் பகுதியை சேர்ந்தவர் நிகோலி நிக்கி கெல்லி (வயது 23) இவரை போலீசார் சொந்த குழந்தையை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது நிக்கி கெல்லிக்கு ஜியாம் பெலிக்ஸ் என்ற 11 ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவர் வீட்டு சுகாதார உதவியாளராக பணி புரிந்து வந்தார்.கெல்லி குழந்தை பெலிக்ஸை படுக்கை விரிப்பை கொண்டு முகத்தை போர்த்தி மூச்சு திணறவைத்து கொலை செய்து உள்ளார் .குழந்தையை மூச்சு திணறவிட்டு இவர் அரைமணிநேரம் வெளியே சென்று விட்டார்,

இதோடு மட்டுமல்லாமல் இறந்த தனது மகனின் உடலை போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போட்டு உள்ளார். அதில் ஆர்.ஐ.பி ( R.I.P) என தலைப்பிட்டு உள்ளார்.

எனது ஆண்குழந்தையை இழந்துவிட்டேன். உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை அவனது மறுபடியும் என்னுடைய வாழ்க்கைக்கு அழைத்துவரும் என நம்புகிறேன்..நான் அவன இறந்ததை மிகவும் பயங்கரமாக நினைகிறேன்.அவனை பாதுக்காக்க வேண்டிய அம்மா நான் அவனது ஆவி எப்போதும் என்னை சுற்றி இருக்கும் என நம்புகிறேன். என குறிபிட்டு உள்ளார்.

Tags: , , ,

Leave a Reply