யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் இயங்கி வருகிறார்கள். வட கிழக்கு பகுதிகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என்று பல தடவைகள் புலம்பெயர் தமிழர்கள் கூறிவருகிறார்கள்.
ஆனால் இவை அனைத்தையும் சிலர் இன்னமும் உதாசீனம் செய்து வருகிறார்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பலர் விடுமுறைக்கு யாழ் செல்வதும் அங்குள்ள விடுதிகளில் தங்குவதும் வழக்கம். ஆனால் உங்கள் அனைவரையும் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் மிக மிக அவதானமாக கவனித்து வருகிறார்கள் என்பதற்கு நேற்று நடந்த சம்பவம் ஒன்று நல்ல உதாரணமாக இருக்கிறது. 10 இலட்சம் அமெரிக்க டொலர் பணத்தை யாழ் நகரத்தில் உள்ள விடுதியொன்றில் பரிமாறிய இரண்டுபேரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதே அச்செய்தியாகும்.
யாழ் நகரத்தில் உள்ள பிரபல விடுதியில் நேற்று முன்தினம் இரவு இந்த பணப்பரிமாற்றம் நடந்தது. நல்லூரைச் சேர்ந்த 30 வயதான ஒருவரும், அவரின் நணபரான குருநகரைச் சேர்ந்த 34 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். பணப் பரிமாற்றம் ஒன்று நடந்ததை கிறீன்கிராஸ் விடுதியில் வேலைபார்த்த ஒருவர் (சிங்கள புலனாய்வுப் பிரிவினர்) பொலிசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்.
உடனடியாக விடுதியை சுற்றிவளைத்த காவல்த்துறையினர் இருவரையும் கைது செய்தனர். குறித்த இந்த பணத்தை வீடு வாங்க இல்லையென்றால் கணியை வாங்க அவர்கள், பரிமாறி இருக்கலாம். இல்லை தொழில் தொடங்க உபயோகிக்க இருந்திருக்கலாம். ஆனால் பொலிசார் இவர்களை கைதுசெய்து பணத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். இந்த சிங்கள பொலிசாரிடம் இருந்து எப்போது இந்த பணம் மீண்டு தமிழர்கள் கைகளில் கிடைக்கும் ? இது தான் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
















