கார் ஓட்டப்பந்தயத்திற்கு 300 விலைமாதர்கள் வரவழைப்பு – கண்டி நகருக்கே களங்கம் !

kandy-car raceகண்டியில் நடைபெற்ற கார் ஓட்டப்பந்தயத்தன்று சுமார் 300 விலைமாதர்கள் வரவழைக்கப்பட்டனர் அது உலகின் புனித நகரம் என பெயர் பெற்ற கண்டி நகருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் களங்கமாகும் என மத்திய மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் மகிந்த அபேகோன் தலைமையில் பல்லேகலையில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது;

உலக மரபுரிமை நகராகவும், உலக புனித நகராகவும் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள கண்டி மாநகரில் கார் ஓட்டப்பந்தயங்களைப்போன்ற கேளிக்கைகள் நடைபெறக்கூடாது என்று கோரிக்கை விடுத்தும் அதுமீறிப்பட்டது. அதிகாரம் படைத்த தனி மனிதனுடைய தேவைக்காக தனி நிறுவனம் ஒன்று எதற்கும் அஞ்சாது சட்டத்தை மதுக்காது கார் ஓட்டப்பந்தையத்தை நடத்தியுள்ளது.

அன்றைய தினம் கண்டி மாநகரில் மாலை 5 மணிக்குப்பிறகு சாதாரண பொதுமக்களுக்கு இடையில் விலைமாதர்கள் நடமாடும் சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

கண்டி நகர சுற்றுலாவிடுதிகளில் அக்கார் ஓட்டப்பந்தயத்தினத்தன்றி சுமார் 300 மேற்பட்ட விலைமாதர்கள் கொண்டு வரப்பட்டிருந்தாகவும் அதில் அனேகமானோர் வெளிநாட்டு விலைமாதர்கள் எனவும் தெரியவருகிறது. அது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

எனவே, எதிர்வரும் காலத்தில் இவ்வாறான காலாசார இழிவான செயல்களையும் கோரிக்கைகளையும் கண்டியில் மேற்கொள்ள இடமளிக்கக்கூடாது என்றார்.

Tags: , ,

Leave a Reply