சினிமா விழாக்களில் ஏழை மாணவிகள்; ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்த வார்டன்கள்..!

tamilgirlsநடிகர் ஸ்ரீகாந்த் தயாரித்து நடிக்கும் படம் நம்பியார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நேற்று நடைபெற்றது. பொதுவாக இசைவெளியீட்டு விழா என்றால் முன்னணி நடிகர்களுக்கே கூட்டம் வருவதில்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக மார்கெட் இழந்த நடிகர் ஸ்ரீகாந்திற்கு திரையரங்கமே நிரம்பி வழியும் கூட்டம் கூடியது. அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கல்லூரி பெண்கள். கல்லூரி பெண்கள்… அதுவும் இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் வரக்காரணம் என்ன என்பது, பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இது பற்றி அங்கிருந்த சில பெண்களிடம் விசாரிக்கும் போது, அவர்கள் கூறியது அதிர்ச்சியை உண்டாக்கியது.

விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் அனைவரும் ராணிமேரி கல்லூரி மற்றும் காயிதேமில்லத் கல்லூரியில் விடுதியில் தங்கிப்படிக்கும் வெளியூர் மாணவிகள். இவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததே அந்த விடுதியின் வார்டன் தான் எனக்கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். சூர்யாவை, பார்க்கலாம், ஆர்யாவை பார்க்கலாம், சந்தானத்தை பார்க்கலாம் எனக்கூறி அந்த மாணவிகளை ஆசை வார்த்தை கூறி விடுதி வார்டன்கள் அழைத்து வந்துள்ளனர். வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியூர் அதுவும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த ஏழை மாணவிகள். வார்டன்களே கூப்பிடுவதால் நடிகர்களை பார்க்கும் ஆசையில் மாணவிகளும் வந்துள்ளனர்.

வெளியூர்களில் இருந்து அன்றாடம் கஷ்டபட்டு சம்பாதிக்கும் பணத்தை பிள்ளைகள் படிப்பிற்காக அனுப்பிவைக்கின்றனர் பெத்தவர்கள். கல்லூரியிலும் விடுதியிலும் சேர்க்கும் போது, பிள்ளைகளை வெளியில் அனுப்புதில்லை, எனக்கூறி சேர்க்கின்றனர். ஆனால் தற்பொழுது வார்டன்களே பணத்திற்காக ஷோ காட்டும் நடிகர்களை பார்பதற்காக அழைத்து வந்துள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளிகின்றது.

இவர்களை இங்கு அழைத்துவரக் காரணம் யார்? இந்த விழாவிற்கும் வார்டன்களுக்கும் என்ன சம்பந்தம் என மேலும் மேலும் துருவி துருவி விசாரிக்கும் போது தான் பல உண்மைகள் தெரியவந்தது. பொதுவாக சினிமா விழாக்களில் பார்வையாளர்கள் வேண்டும் என்றால் ஏஜெண்டுகள் மூலம், வாடகைக்கு ஆட்கள் ஒப்பந்தம் செய்யப்படுவர்கள். ஆனால் இந்த விழாவிற்கு உடனடியாக 300 பேருக்கும் மேல் ஆட்கள் வேண்டும் என்பதால் அவர்களால் திரட்ட முடியவில்லை. எனவே தான் இந்த இரு கல்லூரிகளையும் தொடர்பு கொண்டு மாணவிகளை அழைத்துவந்துள்ளனர். இதற்காக விடுதிகாப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கல்லூரி மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டது ஒரு டீயும் பப்சும் தான்.

இந்த கூத்து இந்த விழாவிற்கு மட்டும் தானா, அல்லது இது போன்று நிறைய நடக்கின்றதா என தெரியவில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை நம்பி பிள்ளைகளை ஒப்படைத்தால், அவர்களே இது போன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நமது இணையதளம் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பினால் மட்டும் போதாது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என தினமும் விசாரியுங்கள். அவர்கள் செய்யும் காரியம் நல்லதா? கெட்டதா? என அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள். விடுதியில் சேர்த்துவிட்டு பணம் அனுப்பிவிட்டதோடு உங்கள் கடமை முடியவில்லை. அதற்கு பிறகுதான் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் நிறைய உள்ளது.

Tags: , ,

Leave a Reply