மலேசியாவில் கைதான 4 புலிகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க முடிவு…!

malasiaவிடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மலேசியாவில் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட நான்கு தமிழர்களும், அடுத்தவாரம் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இவர்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களை கொழும்புக்குக் கொண்டு வருவதற்காக – சிறப்புப் பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகள் நால்வர் அடுத்த வாரம் கோலாலம்பூர் செல்லவுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு மலேசியாவில் இருந்து சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படவுள்ள நால்வரில் ஒருவர், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைக் கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply