கூட்டமைப்பும் அரசாங்கமும் சண்டையாமே: தென்னாபிரிக்க அக்காவின் கொண்டையை பார்த்து..!

africa-girlsஇலங்கையில் நோர்வே சமாதான முயற்சிகளை மேற்கொண்டு நாட்டை அழித்தது போக இப்போது தென்னாபிரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இவ்வளவு நாடுகள் இருக்க ஏன் தென்னாபிரிக்கா களத்தில் இறங்கி இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த முற்படுகிறது என்று நீங்களை ஒருவேளை நினைக்கலாம்.

தென்னாபிக்காவில் உள்ள பல செல்வந்தர்கள் இலங்கையில் பல முதலீடுகளைச் செய்ய உள்ளார்கள். அதிலும் ஆழும் கட்சியில் பெரும் செல்வாக்குள்ள இப்ரகீம் என்னும் தொழிலதிபர் இலங்கையில் பல முதலீடுகளை ஏற்கனவே செய்துவிட்டார். இனியும் ஒரு போர் ஆரம்பமானால் அவருக்கு பாரிய நஷ்டம் ஏற்படும். அதனால் தான் தென்னாபிரிக்க அரசாங்கத்தை இதில் தலையிட வைத்து ஒரு அவசர தீர்வு திட்டமை ஒன்றை தமிழர்கள் கைகளில் கொடுத்துவிடவேண்டும் என்று தென்னாபிரிக்கா தற்போது களமிறங்கியுள்ளது.

இந்த விடையம் தெரியாத அல்லது புரியாதது போல நடிக்கும் சிலர், தென்னாபிரிக்காவின் இத்திட்டத்தை ஆதாரித்து வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி தற்போது தனது பரிவாரங்களோடு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். தன்னுடன் சில பெண்களையும் இவர் அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே தெரியவில்லை போலும். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் ஏதோ பிரச்சனையாமே ! அதனை தீர்த்து வைக்கவே நாங்கள் வந்துள்ளோம் என்று இப்பெண்கள் சொல்லித் திரிகிறார்கள்.

அட தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தான் பிரச்சனை என்ற அடிப்படை விடையம் கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க. இவர்கள் போட்டு வந்த கொண்டைய பார்த்து தான் பலர் வியந்து போனார்களாம். வட மாகான ஆளுனர் தொடக்கம் , தங்கேஸ்வரி முதல்கொண்டு அனைவரும் இந்த கொண்டை நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

Tags: , ,

Leave a Reply