மனைவியை -மகன்.நண்பர்கள் கற்பழிக்க விட்டு இரசித்த கணவன்

Sexual-Abuse11மும்பையில் 45 வயது பெண் ஒருவர் தன்னை தனது கணவரும், கணவரின் வளர்ப்பு மகனும், நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை டின்தோஷி காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2004 ஆம் ஆண்டு எனது முதல் கணவரை நான் விவாரத்து செய்தேன். பின்னர் முகமத் அஸ்லம் கான் என்பவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தோசமாக வைத்துக் கொளவதாக கூறி திருமணம் செய்தார். நாங்கள் இருவரும் திருமணம் செய்த பின், உத்தர பிரதேசம் முராதாபாத் சென்றோம். அங்கு சென்ற பிறகு தான் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து அஸ்லம் கான் துன்புறுத்தினார். அவரது மகன் அமீர் பல நேரங்களில் என்னை கட்டயாப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் நான் அங்கிருந்து மும்பை திரும்பினேன். டின்தோஷியில் உள்ள எனது தாயார் வீட்டிலேயே வாழ தொடங்கினேன்.

ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தேன் அப்போது அஸ்லம் கான் அவரது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். 3 பேரும் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தனர். மீண்டும் மீண்டும் கொடுமைகளை கண்ட நான் ஒரு வழக்கறிஞரை நாடினேன். அவரது உதவி மூலம் எனது கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதனையடுத்து டின்தோஷி போலீசார், அவரது கணவர், வளர்ப்பு மகன் மற்றும் நண்பர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Tags: , ,

Leave a Reply