காதலருக்காக ஒரு கோடி ரூபாயை இழந்த பிரபல நடிகை

deepika-ranvirsingh-birthdayபாலிவுட்டின் முக்கிய நடிகர் ரன்வீர் சிங் அவர்களின் 29 வது பிறந்தநாள் சமீபத்தில் துருக்கியில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை தீபிகா படுகோனே ரூ.1 கோடியை இழக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு கடந்த 6ஆம் தேதி மும்பையில் நடக்கவிருந்தது. படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் கடைசி நேரத்தில் படப்பிடிப்புக்கு வரமுடியாது என்று கூறிய தீபிகா படுகோனே துருக்கி நாட்டிற்கு பறந்துவிட்டார்.

தீபிகா படுகோனே அவசரமாக துருக்கி நாட்டிற்கு சென்ற காரணம் பின்னர்தான் தெரிந்தது. தன்னுடைய நெருங்கிய நண்பரான ரன்வீர் சிங் பிறந்தநாள் விழா துருக்கியில் நடக்கவிருப்பதால் அந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர் துருக்கி சென்றதாக கூறப்படுகிறது.இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்கா ஷர்மா ரன்வீர் சிங்கின் முன்னாள் காதலி என்பது அனைவரும் தெரிந்ததே.

தற்போது தீபிகா படுகோனே, ரன்வீர்சிங்கை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. காதலரின் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஒருகோடி கிடைக்கும் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்றதில் இருந்தே இது உறுதியாகியிருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.

Tags: , ,

Leave a Reply