யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பற்றை காட்டில் இருந்து காவல்துறையினருடைய சீருடை மீட்கப்பட்டுள்ளது.
புத்தகப் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அச் சீருடையுடன், காவல்துறையினர் பயன்படுத்தும் குறிப்பு புத்தகமும் காணப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மெலும் தெரியவருவது,
மேற்படி பகுதியில் பழைய இரும்பு பொறுக்க சென்ற சிறுவர்களால் அங்கிருந்த பற்றை காட்டுக்குள் இருந்து புத்தகப் பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பைக்குள் காவல்துறையினருடைய சீருடை,குறிப்பு புத்தகம் என்பன காணப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்கப்பட்ட சீருடையை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் நேற்று சீருடை மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் குடும்பத்தவர் ஒருவர் கட்த்தி கொண்டுவரப்பட்டு கொலை செய்ய பட்டிருந்தர். குறித்த நபரை கடத்துவதற்கு காவல்துறையினருடைய சீருடை பயன் பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.
















