நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் தன்னிச்சையான மரணதண்டனைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்புப் அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் சிறிலங்காவுக்கு வர அனுமதி கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முயன்ற போதிலும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை.
நிலுவையில் உள்ள தமது பயணத்துக்கான கோரிக்கையை, சிறிலங்காவும் மற்றும் சில நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ள ஊக்குவிப்பதாக, ஐ.நா சிறப்புப் அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் விடுத்திருந்த அவசர கோரிக்கை ஒன்றில், குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















