வடக்கில் இராணுவ அதிகாரத்தை தக்க வைக்கவே மீண்டும் சந்திரசிறி நியமனம்: சாடுகிறது கூட்டமைப்பு

Mahinda-Rajapaksa1வடக்கில் இராணுவத்தின் நிகழ்ச்சி நிரலைதக் தக்கவைக்கவே முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறியை மகிந்த ராஜபக்ச மீண்டும் வடக்கு மாகாண ஆளுநரா நியமித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாகாண சபை முறைமையை இந்தியாவே கொண்டு வந்ததன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தை கையாண்டு சரியான தீர்வினை ஏற்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நம்ப முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தேர்தலையடுத்து தற்போதைய ஆளுநர் பதவிக் காலம் முடிவடையும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார். அதன் பின் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவரை ஆளுநராக நியமிப்பதாக வட மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து மீண்டும் 3 வருடத்துக்கு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் தான் வழங்கிய உத்தரவாதங்களை மீறுவது புதிய விடயமல்ல. தற்போதும் தான் வழங்கிய உத்தரவாதத்தை மீறியே செயற்பட்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply