மகிந்த வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளது – சி.வி கவலை

vicki-mahi2வடக்கு மாகாண ஆளுநராக வேறு ஒருவரை நியமிப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பதவிக் காலம் முடிந்ததும் உடனடியாகவே அவருக்குப் பதிலாக இராணுவப் பின்னணியற்ற ஒருவரை ஆளுநராக நியமிப்பதாக கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த போது எனக்கு உறுதி மொழி வழங்கியிருந்தார்.

எனினும் அவர் தனது அதிகாரிகளிடையே இருந்து சிவிலியன் ஒருவரைத் தேடிய போதும், கண்மூடித்தனமாக கட்டளைகள் எதனையும் ஏற்று நடக்கக் கூடிய எவரையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கருதுகிறேன்.

இந்த நியமனத்தை மற்றுமொரு முறிந்த உறுதிமொழியாகப் பார்ப்பதுடன், இதன் மூலம் ஒத்துவேலை செய்ய விரும்பாத, பலாத்காரமான, இராணுவ தலைமையிலான உறவை தமிழர்களுடன் பேணவே விரும்புகிறார் என்பதையே காண்பிக்க விரும்புகிறார் என்பதைக் காண்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply