திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் விஜய்க்கு உள்ள செல்வாக்கு சரிந்துவிட்டதை உலகறியும்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் கே.எஸ்.ரவிகுமார் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு, அந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் அஜித் மட்டுமே என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து விஜய் தரப்பில் அவரை தொடர்பு கொண்டு வருத்தப்பட்டதால், தான் அப்படி சொல்லவே இல்லை என்று குட்டிக்கரணம் (பல்டி) போட்டார் ரவிகுமார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் விஜய்க்கு மற்றொரு அவமானம் ஏற்பட்டது.
ஒரு காலத்தில் அவருடன் ஈருடல் ஓருயிராக இருந்த த்ரிஷாவினால் ஏற்பட்ட அவமானம் இது.
அண்மையில் அமெரிக்கா சென்றார் த்ரிஷா.
அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டபோது, அவருக்கு பிடித்த கதாநாயக நடிகர்களைப் பட்டியலிடச் சொல்லி இருக்கிறார்கள்.
அஜித்துக்கு முதலிடம் கொடுத்த த்ரிஷா, ஆறுதல் பரிசாக விஜய்க்கு 5 ஆவது இடத்தைக் கொடுத்திருக்கிறார்.
த்ரிஷா கொடுத்த இந்த தர வரிசை விஜய்யையும் அவரது ரசிகர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது.
விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி படங்களில் இணைந்து நடித்த பிறகுதான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்.
அதற்கு முன்புவரை ரிச்சி கேர்ள் ரேன்ஜில்தான் இருந்தார்.
விஜய்க்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தால்தான் அவரை முன்னணி கதாநாயகியாக திரையுலகம் ஏற்றுக்கொண்டது. அந்த நன்றியை மறந்துவிட்டார் த்ரிஷா
– என்று சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் த்ரிஷாவை கழுவி ஊற்றுகின்றனர்.
இன்னொரு பக்கம், விஜய்யே தனக்கு நெருக்கமானவர்களிடம் த்ரிஷா பற்றி வருத்தப்பட்டாராம்.
அதாவது, கில்லி, திருப்பாச்சி படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிறகு அவருடன் மிகவும் நெருக்க்க்க்க்க்க்மாக இருந்தார் த்ரிஷா.
அந்த நெருக்கத்தை வைத்து அவ்வப்போது பில் போட்டு வந்தவர், வீடு கட்டும்போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டதைச் சொல்லி சுமார் 40 லட்சம் வரை விஜய்யிடமிருந்து வாங்கினாராம்.
அப்போது த்ரிஷா மீது கிறக்கத்தில் இருந்த விஜய் அவர் கேட்டபோதெல்லாம் கஜானாவைத் திறந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை எல்லாம் தன் நண்பர்களிடம் இப்போது சொல்லி வருத்தப்பட்டாராம் விஜய்.
















