பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் பெற்றோர்கள் ஆளாக நேரிடும். சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள், ஒருபடி மேலே போய், பெற்றோர் மீது வழக்கே தொடர்ந்து விட்டனர். தங்களுக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்பதுதான் பெற்றோர் மீது அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு.
சவுதி அரேபியாவில், ரியாத் நகரில் 11 வழக்குகளும், மதினா நகரில் 4 வழக்குகளும், தம்மம், மக்கா, ஜெட்டா, ஜசான் ஆகிய ஊர்களில் தலா 2 வழக்குகளும் இதுபோல் தொடரப்பட்டுள்ளன. இதைப் பார்த்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், ‘குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், பெற்றோரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், பெண்கள் தாங்களே திருமணம் செய்துகொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கூறினார்.
















