3 ஆம் இடத்துக்கான போட்டியில் 3:0 விகிதத்தில் பிரேஸிலை வென்றது நெதர்லாந்து

netherlands1உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் நெதர்லாந்து அணி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான போட்டியில் வரவேற்பு நாடான பிரேஸிலை 3:0 கோல் விகிதத்தில் நெதர்லாந்து வென்றது.

ப்றசிலியா நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல்கோலை அடித்தார். பெனல்ட்டி வாய்ப்பொன்றை பயன்படுத்தி ரொபின் வான் பியர்ஸி அந்த கோலை அடித்தார். 16 ஆவது நிமிடத்தில் டேலி பிளைட் கோல் அடிக்க இடைவேளையின்போது நெதர்லாந்து 2:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

போட்டியின் கடைசி (90ஆவது) நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஜியோர்ஜினியோ விஜ்னல்டம் மற்றொரு கோலை அடித்தார்.

பிரேஸில் அணி அரை இறுதிப்போட்டியில் ஜேர்மனியிடம் 7:1 விகிதத்தில் படுதோல்வியடைந்தபின் 3 ஆம் இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்திடம் 3:0 விகிதத்தில் தோல்வியுற்றுள்ளளது.

பிரேஸில் அணி 1940 ஆம் ஆண்டின் பின்னர் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரு போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் தடவையாகும்.

Tags: , ,

Leave a Reply