சிறிலங்காவுக்கு கடந்தவாரம் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா ஏமாற்றத்துடன் திரும்பியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர், அதிகளவு எதிர்பார்ப்புடனும் முழுமையான நம்பிக்கையுடனும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ரமபோசா, சிறிலங்கா அரச தரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் பின்னர், ஏமாற்றத்துடனும், வெறுப்புடனும் நாடு திரும்பியதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். சிறிலங்கா அதிபருடன் நடத்திய நீண்ட பேச்சுக்களின் போது, சிறில் ரமபோசா, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், மகிந்த ராஜபக்சவோ, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால், சிறில் ரமபோசா, துயரத்தை வெளிப்படுத்தியவாறே அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
















