சிங்கள அமைச்சர்களின் குற்றச்சாட்டினை அமெரிக்கா நிராகரித்தது!

USA-Flag-and-Eagleஅரசியல் நோக்கத்துடன், அமெரிக்கா சமூக ஊடக பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் சிலர் சுமத்திய குற்றச்சாட்டை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர்,

“அமெரிக்கத் தூதரகத்தினால், தொண்டு அடிப்படையில் சமூக ஊடகங்கள் குறித்து அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

சிறிலங்காவில் கருத்து வெளிப்பாடு மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான எமது நீண்டகால ஆதவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன “என்று தெரிவித்துள்ளார்.

5000 இளைஞர்களுக்கு அமெரிக்கத் தூதரகம், சமூக ஊடகங்கள் தொடர்பான பயிற்சியை அளித்து வருவதாகவும்.இது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதி என்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply