ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையிடம் ஜீ.எல் உருக்கமான வேண்டுகோள்…
அளுத்கம, பேருவனை சம்பவங்களை முஸ்லிம் மக்கள் சர்வதேச மயப்படுத்தக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையின் பிரதிநிதிகளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலுத்கம சம்பவம் ஓர் துரதிஸ்டவசமான சம்பவம் எனவும், அதனை ஒரு சிலர் பூதாகாரமாக்கி குழப்பங்களை விளைவிக்க முயற்சிப்பதாக அமைச்சர் பீரிஸ் குறி;பிட்டு;ள்ளார்.
இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் சில பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த எடுத்த முயற்சி பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அளுத்கம சம்பவம் குறித்து இலங்கை அளித்த விளக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு ஒன்றை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது பொது பல சேனாவை தொடர்ந்தும் முஸ்லீம் சமூகத்தற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேச அனுமதிப்பது குறித்த தமது ஏமாற்றத்தை முஸ்லீம் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ளனர்.
















