அண்ணன் காதல் தோல்வியில் இறந்தார் – காதலித்தவளின் வீட்டைக் கொழுத்தி தம்பி அட்டகாசம்.

uduvilகடந்த மாதம் உடுவில் தெற்கில் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டான் பாஸ்கரன் ஜூட் ஜெனிஸ்டனின் என்னும் இளைஞன்.

இதனையடுத்த இந்த இளைஞனின் ஒன்றுவிட்ட தம்பியார் குறித்த இளைஞன் காதலித்த யுவதியின் வீட்டில் பெரும் அட்டகாசங்கள் செய்து வருவதாகத் தெரியவருகின்றது. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் இறப்புக்கு அயல் வீட்டவரே காரணம் எனக் கூறியே இத்தகைய நடவடிக்கைகளை தனது வீட்டில் உறவினர்கள் கூடும் வேளையில் இந்த மாணவன் மேற்கொண்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த வீட்டுக்காரர்கள் தமது வீட்டைவிட்டு வெளியேறி வேறு உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவன் அந்த வீட்டினுள் அடிக்கடி புகுந்து இறந்தவரின் அஞ்சலி நோட்டீஸுகளை வீட்டின் உட்புறம் முழுவதும் ஒட்டியதுடன் உள்ளிருந்த பொருட்களையும் நாளாந்தம் அடித்துடைத்தும் வந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறந்தவருடைய முப்பத்தோராம் நிகழ்வுக்கு உறவினர்கள் வந்திருந்த வேளையில் குறிப்பிட்ட வீட்டை தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, கட்டில்கள், மெத்தைகள் போன்றவற்றை கிணற்றில் போட்டுமுள்ளார்.

இந்தச் சம்பவம் சம்பந்தமாக சுன்னாகத்தில் பிரபல கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மேற்படி மாணவனுக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் மேலும் வன்முறைகள் ஏற்படா வண்ணம் சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு அதிக எண்ணிக்கையான பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியிருந்தனர்

Tags: , ,

Leave a Reply