‘FETNA’ எனப்படும் வடஅமெரிக்காவை சேர்ந்த தமிழர்கள் விழா கனடாவில் நடந்து வருகிறது.இவ்விழாவில் கலந்து கொண்ட த்ரிஷாவிடம் ரசிகர்கள் கேட்ட ஹீரோக்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்ததில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் நடித்த ஹீரோக்களை வரிசைப் படுத்தவும் என திரிஷாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதலிடம் அஜித்துக்குத் தான் எனவும் , தொடர்ந்து இரண்டாம் இடம் சூர்யா , மூன்றாம் இடம் விக்ரம், நான்காம் இடம் கமல், மற்றும் ஐந்தாம் இடம் விஜய் என கூறியிருக்கிறார்.
இதனால் சமூக வளைதளங்களில் விஜய் ரசிகர்கள் த்ரிஷாவை வசை பாடத் துவங்கியுள்ளனர்.
விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி என ஹிட் படங்கள் இருக்கும் தருவாயில் எப்படி அவர் விஜய்க்கு ஐந்தாம் இடம் தரலாம் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
அதே வேளையில் அஜித்துக்கு முதல் இடம் கொடுத்ததில் அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தும் அவரை புகழ்ந்தும் ஸ்டேட்டஸ்கள் போட ஆரம்பித்துள்ளனர்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் யுத்தம் சமூக வலைதளங்களில் வலுத்து வரும் நிலையில் தற்போது த்ரிஷா அளித்த ஹீரோக்கள் வரிசையால் இவர்களின் சமூக வலைச்சண்டை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் த்ரிஷா “எல்லா ஹீரோக்களையும் நான் சமமாக மதிக்கிறேன் FETNA நிகழ்ச்சியில் நான் பேசியதை யாரும் தவறாக கருத வேண்டாம்,
யார் மனதையும் புண் படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
















