எல்லா குடும்பங்களில் உள்ள கணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும்படிதான் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். ஆனால் பிரிட்டனில் உள்ள ஒரு கணவர் தனது மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டியதால் தற்போது நீதிமன்ற தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
வடக்கு லண்டனில் உள்ள Barnet என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான புகார் கொடுத்துள்ளார். தனது கணவர் அல்லாவிடம் தனக்கு கேன்சர் வரவேண்டும் என அடிக்கடி வேண்டிக்கொள்வதாகவும், இந்த செயல் தன்னை மனரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனால் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கணவர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி Judge Marcia Levy அவர்கள் இதுபோன்ற ஒரு வழக்கை தனது வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்று அதிர்ச்சியடைந்துள்ளார். கணவரிடம் அவர் நேரடியாக விசாரணை செய்தபோது, அவர் தான் அல்லாவிடம் தனது மனைவி செல்வதுபோல் ஒருபோதும் வேண்டியதில்லை என்றும், தனது மனைவி பொய் கூறுகிறார் என்றும் கூறினார். ஆனால் இந்த தம்பதிகளின் இரண்டு மகள்களும் தந்தைக்கு எதிராக சாட்சி கூறியதால், நீதிபதி கணவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என தெரிகிறது.
பெயர் வெளியிட விரும்பாத இந்த தம்பதிகள் இருவருமெ முஸ்லீம்கள் என்றும் இஸ்லாமிய மத முறைப்படி இவர்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















