பிரிட்டனில் உள்ள ஒரு குழந்தை பிறக்கும்போதே மூக்கு இல்லாமல் பிறந்து அபூர்வமாக இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றது.
பிரிட்டனில் உள்ள Tessa Evans என்ற 17 மாத குழந்தைக்கு பிறக்கும்போதே மூக்கு இல்லை. congenital arhinia, என்ற குறைபாட்டுடன் மூக்கு இல்லாமல் பிறந்த Tessa Evans, இதுவரை தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றது. இதுமாதிரியான குழந்தைகள் உலகில் இதுவரை 47 குழந்தைகள்தான் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசம் என்பதையே என்னவென்று அறியாத இந்த குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவு இருப்பதாக இந்த குழந்தையின் தாயார் Mrs Evans அவர்கள் கூறியுள்ளார். மூக்கு இல்லாமல் இருந்தாலும், தன்னுடைய குழந்தை எப்போது புன்னகையுடன் இருப்பாள் என்றும் அந்த புன்னகை விலை மதிப்பு இல்லாதது என்றும் அவர் தன் மகள் குறித்து பெருமையாக கூறுகிறார்.
இந்த குழந்தையை பரிசோதனை செய்த பிரிட்டன் மருத்துவர்கள் செயற்கை மூக்கு பொருத்த ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த வருடத்தில் இந்த குழந்தைக்கு செயற்கை மூக்கு பொருத்தப்படும் என்றும், விரைவில் மற்ற குழந்தைகளை போல தனது மகளும் வாசனையை நுகர்வாள் என்றும் Mrs Evans அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
















