பலகோடி ரூபாய் மதிப்பில் நடிகை அசினுக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் சொந்த வீடு வாங்கி கொடுத்திருப்பதாக மும்பையில் தற்போது பலமான வதந்தி பரவி வருகின்றது.
சல்மான்கான் மற்றும் அசின் ஆகிய இருவரும் ‘லண்டன் ட்ரீம்ஸ்’ என்ற படத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அப்போதே இந்த வதந்தியை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வதந்தி மும்பை முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது.
முக்கிய முக்கிய பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பில் அசின் பெயரில் சொந்த வீடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய பணம் முழுவதையும் சல்மான்கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாயாருடன் தனியாக அந்த வீட்டில் வாழும் அசினை பார்க்க சல்மான்கான் அடிக்கடி வந்து செல்வதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.
ஆனால் இந்த வதந்தி குறித்து அசின் உதவியாளர் மறுப்பு தெரிவித்துள்ளர்.
நேற்று மும்பை பத்திரிகையாளர்களிடையே பேசிய அசின் உதவியாளர் “அசினுக்கு சல்மான்கான் வீடு ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பது பழைய வதந்தி. ‘லண்டன் டிரீம்ஸ்’ படத்தில் நடித்தபோது இது வெளியானது. இப்போது மீண்டும் அந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதில் உண்மை இல்லை. அசினும் சல்மான்கானும் நல்ல நண்பர்கள். அசினுக்கு சல்மான்கான் வீடு எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதை சட்டப்படி தன்னிடம் உள்ள தஸ்தாவேஜுகள் மூலம் அவரால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
















