புலிகளால் புதைக்கப்பட்ட கோடிக்கணக்கான அமெரிக்க டொலர் : பரபரப்பு தகவல்.

dolarஐயோ இப்படியும் நடக்கிறது என்று தெரிந்தால், எங்கே போய் தலையை முட்டிக்கொள்வீர்களோ தெரியவில்லை. புலிகளின் பெயரை வைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வன்னியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்தவை என்கிற பெயரில் ஒரு மில்லியன் முகப் பெறுமதி குறிக்கப்பட்ட அமெரிக்க டொலர் தாள்கள் கொழும்பு அடங்கலாக நாட்டின் பல இடங்களிலும் உலாவி வருகின்றன. இவற்றை வெளிநாட்டுக் கோடீஸ்வரர்கள் பலரும் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர் என்கிற வதந்தி பரவலாக கட்டி விடப்பட்டு உள்ளது.

இதை உண்மை என்று நம்பி இளையோர்கள் பலர் குறிப்பாக தமிழர்கள் குறுக்கு வழியில் கோடீஸ்வரர்கள் ஆகின்றமைக்காக வரிந்து கட்டி, கிளம்பி, கொழும்பு வந்து உள்ளனர். இதில் முக்கியமான விடையம் என்னவென்றால், புலிகளால் பதுக்கப்பட்ட அமெரிக்க டாலர் என்பதனால் அவற்றின் விலை குறைவாம்.

அதனை குறைவான விலைக்கு வாங்கி பின்னர் கூடுதலான விலைக்கு விற்று பெரும் பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை காட்டப்படுகிறது ! இவர்கள் ஏனைய அலுவல்களை எல்லாம் விட்டு விட்டு, வாய்ப்புக்களை எல்லாம் தட்டிக் களைந்து விட்டு பல மாதக் கணக்கில் தலைநகரத்தில் தங்கி, நாய் அலைச்சல்கள் மேற்கொள்கின்றபோதிலும், எதுவும் நடக்கவில்லை.

அட உள்ளூர் வாசிகள் தான் இப்படி ஏமாந்து அலைகிறார்கள் என்றால், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த டாலரை வாங்க புறப்பட்டு வந்த சிலர் ஓட்டாண்டியாக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதனை இவர்கள் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருக்கிறார்கள். இதன் பிண்ணனியில் இலங்கை புலனாய்வுப் பிரிவினட்ர் உள்ளார்கள் என்பது தெரியவருகிறது. இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இதுபோன்ற அமெரிக்க டாலர் தாழ்களை அச்சடித்து வைத்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.

ஆனால் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அதற்கு வித்தியாசமான காரணங்களை சொல்கிறார்கள். அது என்னவென்றால் குற்றவாளிகளை பிடிக்க தான் தாம் இவ்வாறு தாழ்களை அச்சடித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிலர் இதனை திருடி இவ்வாறு கதைகளை அவிழ்த்துவிட்டு அதனை விற்கபார்க்கிறார்கள் என்று, கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் இலங்கையில் ஏமாற்றப்படுபவர்கள் தமிழர்களாகவே உள்ளார்கள்.

Tags: , ,

Leave a Reply