இங்கிலாந்து தீயணைக்கும் படை வீரர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட அதிகமான உயரம் கொண்ட அளவுக்கு ஏணியில் ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Salisbury என்ற பகுதியை சேர்ந்த 46 வயது தீயணைக்கும்படை வீரர் Roofer Keith Saunders என்பவர் தொடர்ந்து 43,435 அடி உயரம் ஏணியில் ஏறி சாதனை புரிந்துள்ளர். 34 அடி உயரம் உள்ள ஏணியில் இவர் தொடர்ந்து 1000 முறைக்கும் மேல் ஏறி ஏறி இறங்கி இந்த சாதனையை செய்துள்ளார்.
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிக உயரம் இவர் ஏறியுள்ளதாக உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. இவர் இந்த சாதனையை 24 மணிநேரத்தில் தொடர்ந்து ஏணியில் ஏறி ஏற்படுத்தியுள்ளார். இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29,025 அடிகள் மட்டுமே. ஆனால் இவர் ஏறி இறங்கிய தூரம்43,435 அடி ஆகும். இதற்கு முன்பு 43,000 அடி உயரம் ஏணியில் ஏறியதே சாதனையாக கருதப்பட்டது.
Roofer Keith Saunders அவர்களின் உலக சாதனைக்காக அவருக்கு £1,800 மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்னும் சில காலத்தில் தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க திட்டமிட்டுள்ளதாக இவர் சாதனை முடிந்ததும் செய்தியாளர்களிடம் கூறினார்.
















