சமீபத்தில் பிரஸ்டீஜ் மிக்சர் கிரைண்டரின் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விளம்பரத்தில் முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் சேர்ந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த விளம்பரத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் தம்பதிக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பாலிவுட் நடிகர், நடிகைகள் வருடக்கணக்கில் திரைப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து நடிப்பதை விட ஒருசில நாட்கள் அல்லது மணிக்கணக்கில் மட்டும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர். ஷாருக்கான், சல்மான்கான், தீபிகா படுகோனே, காத்ரீனா கைப் ஆகியோர் விளம்பரங்களில் நடிப்பதில் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாராய்- அபிஷேக்பச்சன் நடித்த பிரஸ்டீஜ் மிக்சர் கிரைண்டரின் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. வெறும் 25 விநாடிகள் மட்டுமே உள்ள இந்த விளம்பரம் ஐந்து மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே நடித்த ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் ஜோடிக்கு பிரஸ்டீஜ் நிறுவனம் ரூ.5 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக மும்பையின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விளம்பரத்திற்காக கொடுத்த ஐந்து கோடி ரூயாயும் மிக்சியை வாங்கும் வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழும் என்பதை எப்பொழுது வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள போகின்றார்கள் என தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகை கமெண்ட் அடித்துள்ளது.
















