நாங்கள் இஸ்ரேலாக மாற தயாரக உள்ளோம் – பொதுபல சேனா!

gnanasara-theroமாளிகாவத்தை பிரதேசத்தை காஸா எல்லையாக்குவதற்கு முயன்றால் தங்களது அமைப்பு இஸ்ரேலாக மாறுவதற்குத் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு கூறுகின்றது.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அவ்வமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ராஜஆசனத்தில் அமரவைத்தது பொளத்தகுருமாரும் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினாலேயே அப்படிப்பட்டவர்களை ரவூப்கக்கீம் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கின்றார்.அமைச்சர் ரவூப் ஹக்கீமை ரட்டிவிடாமல் இன்னும் அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்கப்பட வேண்டியதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவில் ஆயுதங்களுடன் முஸ்லீம் பயங்கரவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும் இயங்கி வருகின்றது.
இதுதொடர்பில் அரசாங்கமும் உளவு பிரிவினரும் கவனம் செலுத்த வேண்டும்,இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்க தயாராக உள்ளோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply