மகிந்த வரும்வேளை மக்களை ஆர்பாட்டம் செய்யவிடாது தடுக்க லண்டன் அமைப்பு முயற்சி !

MahindaSriLankaWarAnniversaryகாமன் வெலத் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இங்கே சுமார் உலகில் 54 நாடுகளின் தலைவர்கள் வருகை தர உள்ளார்கள். பிரித்தானிய மகாராணி உட்பட உலகின் பல தலைவர்கள் வரவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை அதிபர் மகிந்தரும் கலந்துகொள்ள இருக்கிறார். இன் நிலையில் மகிந்தருக்கு எதிர்பு தெரிவித்து பெரும் திரளான மக்கள் அங்கே அணி திரள உள்ளார்கள். இதனை குலைக்கும் நோக்கத்திலும் மற்றும் மகிந்தரை காப்பாற்றும் எண்ணத்திலும், லண்டனில் அன்றைய தினம் தாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தமிழ் அமைப்பு ஒன்று செய்திகளை பரப்பி வருகிறது.

மக்களை திசை திருப்பும் நோக்கிலும், மேலும் மகிந்தருக்கு எதிரான போராட்டத்தை சீர் குலைக்கவுமே இந்த அமைப்பு முனைப்பு காட்டி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. குறித்த இந்த அமைப்பு கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்கால் தினத்தை தாமே நடத்துவோம் என்று கூறி நடத்தினார்கள். ஆனால் அங்கே தேசிய கொடியை கொண்டுவரக்கூடாது என்று, இவர்கள் சட்டம் பேசினார்கள். இறுதியில் இதுவே பாரிய பிரச்சனையாக வெடித்தது. அங்கே கூடி நின்ற இளையோர்கள் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் தான் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் தொடங்கலாம் என்று பிடிவாதமாக நின்றதால், இந்த அமைப்பு பின்னர் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டார்கள்.

தமிழ் தேசியத்தின் பால் பற்று இல்லாமல், தேசிய கொடிமேல் விருப்பம் இல்லாமல் வெறும் பந்தாவுக்காக அரசியல் நடத்தும் இதுபோன்ற அமைப்புகளை மக்கள் இனம் காணவேண்டும். வெள்ளை இனத்தவர்களின் சொல்கேட்டு நடக்கும் இதுபோன்ற அமைப்புகள் எமது போராட்டத்தை சிதைத்து வருகிறது. மகிந்தருக்கு குடை பிடிக்கும் இதுபோன்ற அமைப்புகள், மகிந்தர் கிளாஸ்கோ வரும்வேளை வேறு இடத்தில் போராட்டத்தை நடத்தி மகிந்தரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் பார்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். போராட்டம் என்று சொல்லி மக்களை நினைத்த இடத்திற்கு தாம் அழைக்கலாம் என்று இவர்கள் கனவுக்கோட்டை கட்டுகிறார்கள்.

இன அழிப்பு செய்து, 40,000 ஆயிரத்திற்கும் மேல்பட்ட தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ஷ கிளாஸ்கோ வரும்போது, அங்கே செல்லவேண்டாம் என்று ஒரு அமைப்பு கூறுகிறது என்றால், அதில் எவ்வளவு உள்ளர்த்தம் புதைந்து இருக்கும் என்று மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரிய வேண்டும். குறித்த இந்த அமைப்பு யாருக்காக வேலைசெய்கிறார்கள் என்பதனை இனம் காணவேண்டும் என தமிழ் உணர்வாளர்களும், செயல்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளார்கள்.

Tags: , ,

Leave a Reply