பிரித்தானியாவில் உள்ள நஷனல் கிரைம் ஏஜன்சி பெரும் நடவடிக்கை ஒன்றினூடாக சுமார் 660 பேரை கைதுசெய்யவுள்ளதாக கூறியுள்ளது. இப்படைப் பிரிவினர் ஏற்கனவே டாக்டர்கள், ஆசிரியர்கள், சாரண இயக்கத்தை நடத்துபவர்களை கைதுசெய்துவிட்டார்கள்.
அட செக்ஸ் பக்கத்தை பார்பதில் என்ன தவறு என்று பலர் நினைக்க கூடும். ஆம் மேலை நாடுகளில் நீங்கள் தாராளமாக அந்த பக்கங்களை பார்கலாம். ஆனால் கைதான அனைவரும் சிறுபிள்ளைகள், நிர்வாணமாக நிற்பதை பார்த்து ரசிக்கும் மண்டை தட்டிய கேஸ். இவர்கள் சிறுபிள்ளைகள் வேறு நபர்களோடு உடலுறவில் ஈடுபடும் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளதோடு மட்டுமல்லாது, அதனை தமது நண்பர்களுக்கு பரிமாறியும் குணம்கொண்டவர்கள். நேற்று பிரித்தானியாவில் கைதான டாக்டர் ஒருவர் சுமார் 1 லட்சம் தரம், இதுபோன்ற இணையத்தளங்களை பார்வையிட்டுள்ளார் என்ற அதிர்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இதில் விபரீதமான விடையம் என்னவென்றால், மருத்துவர் ஆரிசியர் மற்றும் சாரண(ஸ்கவுட்ஸ்) போன்ற வேலைகளில் உள்ளவர்கள் நிச்சயமாக சிறுபிள்ளைகளோடு பழகுபவர்களாக தான் இருப்பார்கள். அப்படியானவர்கள் தமது தொழிலை பயன்படுத்தி, இச் சிறுவர்களை தமது பாலியல் தேவைகளுக்கு இரையாக்குகிறார்கள். இதந்த பாரிய வட்டம் ஒன்றை பொலிசார் எவ்வாறு கண்டு பிடித்தார்கள் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிறுவர்கள் பாலியல் வீடியோக்களை பரிமாறிக்கொள்ளும் ஒருவர், அவரின் நண்பர், பின்னர் நண்பரின் நண்பர் என்று இதுபோல ஒரு பெரிய வட்டமே உள்ளது. இதில் சுமார் 660 பேர் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் யார் யார் என்பது தொடர்பாக பொலிசார் பல தகவல்களை திரட்டிவிட்டார்கள்.
இனி கைதுகள் தான் பாக்கி உள்ளது. ஒருவர் தனது வீட்டில் அல்லது வேலையிடத்தில் உட்காந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டால் அதனை கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமான விடையம் ஆகும். ஆனால் இதனை எவ்வாறு பிரித்தானியப் பொலிசார் கண்டு பிடித்தார்கள் என்று கேட்டபோது, அவர்கள் கூறிய பதில் இதுதான். நாம் பலரது கம்பியூட்டரை கண்காணித்தோன் என்றார்கள். ஆனால் அது அல்ல விடையம்.
இவர்களே ஒரு போலியான ஆபசத்தளம் ஒன்றை உருவாக்கி அதனூடாக, சிறுவர்கள் பாலியல் தொடர்பாக ஈடுபாட்டில் யார் உள்ளார்கள் என்று பார்த்து பொறிவைத்து அனைவரையும் பிடித்துள்ளார்கள் என்பதே உண்மையாகும் , என்று பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
















