தேர்தல் பொறிமுறைமை அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றியமைக்கப்படுகின்றது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தேவையான முறையில் தேர்தல் பொறிமுறைமையை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றியமைத்து வரவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊவா மாகாணத்தில் ஆசனங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை மாவட்டத்தின் மூன்று ஆசனங்கள் ஊவா மாகாணத்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தமானது அரசாங்கத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அரசியல் லாபத்தை ஈட்டும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் பற்றி ஜனாதிபதி பெருமிதம் கொள்கின்ற போதிலும் உண்மையில் ஜனநாயக விரோத செயற்பாடுகளே இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
















