சிறுவனுடன் தொலைபேசியில் பேசி அதிர்ச்சியளித்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 17-ம் தேதி கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்னும் ஏழு வயது சிறுவன் ராகுல் காந்தியை பார்க்க விரும்பியுள்ளான். ராகுல் காந்தியின் ரசிகனாக கூறப்படும் அந்த சிறுவன் காலை 5 மணி முதலே ராகுல் காந்தியை பார்க்க காத்திருந்துள்ளான். தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுல் காந்தியை பார்க்க முடியாமல் போனது. ’எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகை உடன் காத்திருந்த சிறுவனுக்கு ஏமாற்றமாகியுள்ளது.

ராகுலை காந்தியை பார்க்க முடியாமல் அழுது கொண்டிருந்த சிறுவனின் புகைப்படத்தை அச்சிறுவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவிட, அந்தப்பதிவு கேரளாவில் வைரலாகி உள்ளது. இது கேரள காங்கிரசார் மூலம் ராகுல் காந்திக்கு தகவல் செல்ல உடனடியாக அவர், சிறுவன் நந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் மகிழ்ந்த அந்த சிறுவன், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!