புலியில்லாத வடக்கில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படை தேவையா; கேள்வியெழுப்புகிறார் சரவணபவன் எம்.பி

Saraபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் புலி இல்லை என சர்வதேசத்திற்கு அரசு கூறிவருகின்ற நிலையில் இராணுவம், கடற்படை, ஆகாயப்படையினரை வடக்கில் நிலை நிறுத்தி வைத்திருக்கத்தான் வேண்டுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

காரைநகரில் கடற்படையினரால் சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் கண்டனப் போராட்டம் ஒன்றினை ஊர் மக்கள் முன்னெடுத்தனர்.

அதில் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வினாவினைத் தொடுத்திருந்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

1956ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் கை வைத்த அரசாங்கம் இன்றுவரை அதனை நிறுத்திக்கொள்ளவில்லை. தமிழர்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா என்ற அடிப்படைக் கொள்கையினைக் கொண்டுள்ள சிங்கள அராஜகத்திற்கு எதிராக இன்று நேற்றல்ல எத்தனையோ வருடங்களாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றோம்.

எனினும் தற்போது சர்வதேச சமூகம் ஒரு கண்ணை வைத்ததும் அடிப்பதை எரிப்பதை கற்பழிப்பதை எல்லாம் வேறு விதமாக அரசு மாற்றியுள்ளது.

Tags: , ,

Leave a Reply