மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் ஆசிரியர் (35) ஒருவர், 16 வயது மாணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்வார்.
இந்த ஆசிரியர் சில காலமாகவே அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். அடிக்கடி அவரது வீட்டுக்கே போய் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவியும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வழக்கம்போல் ஆசிரியர் மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த சமயம் பார்த்து மாணவியின் தாயார் வீடு திரும்பியுள்ளார். கதவைத் திறந்த போது, மகள் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்த தாயார் என்ன என்று விசாரித்துள்ளார். மகள் சரியாக பதிலளிக்கவில்லை, பயத்துடன் காணப்பட்டார்.
இதனால் சந்தேகமடைந்த தாயார், படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கதவோரமாக ஆண்கள் அணியும் ஷூ இருப்பதைப் பார்த்தார். கதவை மெதுவாக திறந்து பார்த்த அவர் அங்கு ஆசிரியர் ஒண்டியபடி பதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகுதான் நடந்தது குறித்து தாயாருக்குத் தெரிய வந்தது. பின்னர் பொலிசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மைனர் சிறுமியை மோசமான வார்த்தைகளால் ஏமாற்றி தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை 2 வருடம் பணிநீக்கம் செய்யவும் , 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
இதுதவிர 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபடுமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
















