‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 47 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிலிகுரி மாவட்டம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 36 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
மேலும், ஜல்பைபுரி மாவட்டத்தின் நக்ரகட்டா, சாமுர்ச்சி, பனர்ஹட், மொய்னாகுரி மற்றும் பஹர்பூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஜப்பான் மூளையழற்சியினால் பாதிக்கப்பட்டு, வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
















