ஜூலை 4ம் திகதி மலேசியாவின் முக்கிய இடங்களில் வைத்து 3 இலங்கையர்களை, மலேசிய ரகசியப் பொலிசார் கைதுசெய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இதுவரை காலமும் அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களின் சசி மற்றும் சீலன் எனப்படும் நபர்கள் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள்.
மேலும் இந்திக சஞ்சீவ என்னும் நபர் முன் நாள் இராணுவச் சிப்பாய் என்றும் அவர் மலேசியா சென்று மறைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூவரையும் கடந்த வெள்ளியன்று இரவு மலேசியாவில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று ஏற்றிக்கொண்டு கொழும்பு கட்டநாயக்கா சென்றுள்ளது. இவர்களை மலேசியாவில் இருந்து நாடு கடத்த அன் நாட்டு பொலிசார் உத்தரவிட்டுள்ளார்கள்.
கொழும்பி இருந்து சென்ற 3 அதிகாரிகளிடம் இவர்களை மலேசியப் பொலிசார் கையளித்துள்ளார்கள். கையில் விலங்கை பூட்டி , இவர்களை ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானத்தில் ஏற்றி பின்னர்(இரவு) கொழும்பு கொண்டுசென்றுள்ளார்கள். அங்கிருந்து அம்மூவரையும் 4ம் மாடிக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள், இலங்கை புலனாய்வுப் பிரிவினர்.
















