யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருமணமாகி 6 மாதங்களான அன்டன் சலெஸ்ரா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சலெஸ்ரா- தனது கணவன் எதுவும் பரிசளிக்கவில்லையென வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பின் கைகலப்பில் முடிந்துள்ளது.
பின்னர் வெளியில் சென்ற கணவன் இரவு 9 மணியளவில் வீடு வந்து பார்த்தபோது சலெஸ்ரா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சலெஸ்ராவின் கணவன் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இன்று காலைவரை அங்கு காவலில் இருந்துள்ளனர். இன்று காலை யாழ்.மாவட்ட பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார். சடலம் காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















