நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன். சிம்புவிடம் டாப்சி போட்ட கண்டிஷன்

tapsee-nayantharaஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இயக்குனர் பாண்டிராஜனிடம் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டுமானால் ஒரு கண்டிஷன் என கூறி இயக்குனரையும் சிம்புவையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளாராம்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் ஒரு காட்சியில் கூட நடிக்க மாட்டேன். அவருக்கு எனக்கும் சேர்ந்தால்போல் காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்பது தான் டாப்சி இயக்குனருக்கு போட்ட கண்டிஷன். தெலுங்கில் நயன்தாரா, உச்சக்கட்டத்தில் இருந்தபோது நயன் தாரா நடிக்கவேண்டிய ஒருசில படங்கள் டாப்சியின் கைக்கு சென்றது. அதனால் நயன்தாரா, டாப்சியின் மேல் கோபமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து நயன் தாராவிடம் கேட்டபோது, “டாப்சியா யார் அது? என்று பதில் கேள்வி கேட்டு தன்னை அவமதித்ததாகவும், அதனால்தான் நயன்தாராவுடன் அவர் நடிக்க மாட்டேன் என்ற கண்டிஷன் போடுவதாகவும் பின்னர் பாண்டிராஜனுக்கு தெரியவந்தது.

டாப்சியின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டுதான் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் பாண்டிராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வரும் தீபாவளிக்கு இந்த படத்தை திரையிட முடிவு செய்திருப்பதாகவும் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply