மலேசிய விமானம் தகர்ப்பு: ஸ்ரீலங்கன் ஏர்-வேஸ் விமானங்கள் அதிரடியாக ரூட்டை மாற்றியது !

Malaysian-Airlineஸ்டாக்கோமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேசிய விமானத்தை, உக்கிரேன் வான் பரப்பில் வைத்து ரஷ்ய ஆதரவு கிளர்சியாளர்கள் தகர்த்தது தொடர்பான செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். நெதர்லாந்து மற்றும் ஸ்கான்டிநேவிய நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள், குறுக்கு வழியில் செல்வது வழக்கம். எரிபொருட்களை மிச்சப்படுத்தவே சில விமானக் கம்பெனிகள் இவ்வாறு உக்கிரேன் ஊடாக செல்லும் குறுக்கு வழியைப் பாவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர் வேஸின் விமாங்கள் சிலவும் உக்கிரேன் ஊடாக கடந்த காலங்களில் பறந்துள்ளது என்று கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போது சுதாரித்துக்கொண்ட இலங்கை விமான சேவை போக்குவரத்து நிலையம், தற்போது உக்கிரேன் ஊடாக பறப்பில் ஈடுபடவேண்டாம் என தனது அனைத்து பைலட்டிற்கும் தெரிவித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் பறப்பில் ஈடுபட்டு ஆபத்தில் செக்கியவேளை, அது பறப்பில் ஈடுபட்ட இடத்தில் இருந்து சுமார் 25 கிலேமீட்டர் தொலைவில் ஏர் இந்திய விமானம் ஒன்றும் பறப்பில் ஈடுபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சமபவ தினத்தில் ஏர் லங்கா விமானம் ஒன்றும் ஸ்டாக்கோம் வழியாக கொழும்பு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் உக்கிரேன் பாதை வழியாகதான் சென்றிருக்கலாம் என்றும் சந்தேககம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply