லண்டனில் உள்ள தேம்ஸ் நதி சுத்தமானது என்று யார் சொன்னது..? : அள்ளி எடுக்கப்பட்ட குப்பை..!

london-riverதேம்ஸ் நதியை சுத்தப்படுத்தும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது இவற்றில் நாளாந்தம் பாவிக்கப்பட்ட பல பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. 15 சுழியோடிகள் மற்றும் பலர் இணைந்து கொண்ட இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வில் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டம் கிங்ஸ்டன் பல்கலைகழகத்தின் தொண்டர்கள் அமுல்படுத்தியுள்ளனர். நீருக்கடியில் செல்லும் சுழியோடிகள் தண்ணீருக்கு அடியில் உள்ள பொருட்களில் கொழுக்கிகளை மாட்டிவிட 50க்கும் மேற்பட்ட தொண்டர்களால் இழுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கழிவுகளின் மொத்த நிறை 4 தொன்கள் என்பது அதிர்ச்சி தகவல் ஆகும் இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வு சரே பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட ஷொப்பிங் ட்ரொலிகள் 35 ஸ்கேட்போட்டுகள் 14 சைக்கிள்கள் போன் ஏராளமான பொருட்கள் தேம்ஸ் நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

400 போத்தல்கள் 4 காப்பற்றுகள் ட்றபிக் கோண் இவ்வாறு ஆற்றின் பல பகுதிகளிலும் எடுக்கப்பட்ட அனைத்தும் சூழலியல் நிறுவனத்தினால் றிசைக்கிளிங் செய்யப்படவுள்ளன இந்த சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் 2011ஆம் ஆண்டு கிங்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வில் 3 தொன் எடை மிக்க கழிவுகள் மீட்கப்பட்டன. இத்தகைய ஒரு செயலை செய்வதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply