மதம் மாறுங்கள் அல்லது மரணம் அடையுங்கள். ஈராக் கிறிஸ்துவர்களுக்கு தீவிரவாதிகள் இட்ட கட்டளை. அதிர்ச்சி தகவல்

iraq-crime-s1-2-600ஈராக்கில் உள்ள மொசூல் என்ற நகரம் முதன்முதலாக ஒரு கிறிஸ்துவர் கூட இல்லாத நகரமாக மாறியுள்ளது.

ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பம் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், இந்த நகரத்தில் உள்ளவர்கள் அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லீம்களாக மதம் மாறி கூடுதல் வரி கட்டவேண்டும். அல்லது நகரத்தை விட்டு வெளியேற வேண்டும். இரண்டும் இல்லையென்றால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து மொசூல் நகர கிறிஸ்துவர்கள் கூட்டம் கூட்டமாக குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள கோஹீக், அர்பில் ஆகிய நகரங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மொசூல் நகரில் இருந்த 1800 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயத்தை தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மொசூல் நகரத்தில் முதன்முதலாக ஒரு கிறிஸ்துவர் கூட இல்லாத நகரமாக மாறியுள்ளது.

Tags: , ,

Leave a Reply