மலேசிய விமானம் MH17 ஏவுகணையால் சுட்டு தாக்கப்பட்ட சில நிமிடங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில்ல் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால், அந்த நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக அந்த கருத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாபஸ் பெற்றுக்கொண்டதோடு மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதி மலேசிய விமானம் MH17, சுட்டு வீழ்த்தப்பட்ட சில நிமிடங்களில் சிங்கப்பூர் ஏர்லன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “நாங்கள் பயணிகளின் பாதுகாப்பு கருதி உக்ரைன் வான் எல்லையை உபயோகிப்பதில்லை” என்று பதிவு செய்திருந்தது. (Customers may wish to note that Singapore Airlines flights are not using Ukraine airspace.”)
விமானம் விபத்துக்குள்ளாகி உலகமே அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில் சிங்கப்பூர் விமானம், தன்னுடைய வியாபார யுக்திக்காக மலிவான விளம்பரம் தேட முயலும் வாசகங்கள் அடங்கிய கருத்து தெரிவித்ததற்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனடியாக தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தாங்கள் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளது.
















