சரத் பொன்சேகா உரசிப்பார்த்து வீசப்பட்ட லொத்தர் டிக்கெட்! சோபித தேரருக்கும் அந்தநிலையே: அரசாங்கம்.

Sarath-Fonseka2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் நிலையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் மாதுளுவேவ சோபித தேரருக்கு ஏற்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இளைஞர் வலுவூட்டல்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும 2010ம் ஆண்டு ஏனையவர்களின் உந்துதலால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா அதில் தோல்வியடைந்தார். அவர் இன்று உரசிப்பார்த்து வீசப்பட்ட லொத்தர் டிக்கெட்டை போன்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலிகமுவ பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், சரத் பொன்சேகாவை கொண்டு செய்ய முடியாத ஒன்றையே இன்று சிலர் மாதுளுவாவோ சோபித தேரரை வைத்து செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply